தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்

விழுப்புரம்: மரக்காணம் அருகே இருசக்கர வாகனங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரக்காணம் அருகே இருசக்கர வாகனங்கள் இரண்டும் நெருக்கு நேர் மோதி விபத்து
ரக்காணம் அருகே இருசக்கர வாகனங்கள் இரண்டும் நெருக்கு நேர் மோதி விபத்து

By

Published : Jan 25, 2021, 11:28 AM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (29) என்பவர் டைல்ஸ் கம்பெனியில் டிரைவராக பணிபுரிகிறார். இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்(19) உடன் முன்னூர் கிராமத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பினார்.

அப்போது நல்முக்கல் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை(28) மற்றும் கார்த்திக் ஆகிய இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நல்முக்கல் கிராமத்திலிருந்து மரக்காணம் நோக்கி சொல்லும்போது டி.புதுப்பாக்கம் என்னும் கிராமத்தின் பேருந்து நிலையம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜனார்த்தனன் மற்றும் ராஜதுரை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்ற இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details