விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் நள்ளிரவில் இருசக்கர வானத்தில் வந்த இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வளவனூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் சமுத்திரப் பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணதேவன்(35), ரவிக்குமார் (18) என்பது தெரியவந்தது.