விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மணல் திருட்டைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணனின் வழிகாட்டுதல்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று(ஜூலை 12) திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரேசபுரம் தென்பெண்ணை ஆறு, செஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணியம்பட்டு ஆறு உள்ளிட்டப் பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.