விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரையில், கரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னகுட்டி மகன் முருகவேல்(16), ஆறுமுகம் மகன் மோகன்(21) இருவரும் இன்று தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளனர்.
கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் மாயம்...! - Two students missing
விழுப்புரம்: மரக்காணம் அருகே கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர்.

students missing
அப்போது அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, முருகவேல் அலையில் சிக்கியுள்ளார். இதையடுத்து, அவரை காப்பாற்ற மோகன் முயற்சித்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக இருவரும் அலையில் சிக்கி மாயமாகியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற மரக்காணம் காவல் துறையினர், மீனவர்கள் உதவியுடன் மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.