தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு - Thunderstorms Attack Dead

விழுப்புரம்: திருவெண்ணை நல்லூர் அருகே மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

Two Persons Dead Thunderstorms Attack In Viluppuram
Two Persons Dead Thunderstorms Attack In Viluppuram

By

Published : Jun 24, 2020, 10:46 PM IST

Updated : Jun 24, 2020, 10:59 PM IST

விழுப்புரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை 6 மணிமுதல் சுமார் ஒருமணி நேரம் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அச்சமயத்தில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் அருகேயுள்ள அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சதிஷ் (25) என்பவர் பவ்லரிபாளையம் பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், சதிஷின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அதேபோல், திருவெண்ணை நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்ற இளைஞரும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - காவல் துறை விசாரணை!

Last Updated : Jun 24, 2020, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details