தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு! - ஏரியில் மூழ்கிய சிறுவர்கள்

விழுப்புரம்: கண்டம்பாக்கம் பகுதியிலுள்ள ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Two boys drown in lake and dead in Vilupuram
சிறுவர்கள் உயிரிழப்பு

By

Published : Oct 31, 2020, 3:37 PM IST

Updated : Oct 31, 2020, 3:43 PM IST

விழுப்புரம் மாவட்டம் அருகேயுள்ள கண்டம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன்-சூர்யா தம்பதி. இவர்களது, மகன் முருகன் (12).

இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்-விசாலாட்சி என்பவர்களின் மகன் ரஞ்சித்தும் (11) இன்று (அக். 31) நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியிலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக முருகன், ரஞ்சித் ஆகியோர் ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் சிறுவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Last Updated : Oct 31, 2020, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details