தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது! - cannabis sales in villupuram

விழுப்புரம்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவரை ரோந்துப் பணி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கஞ்சா விற்ற இருவர்
கஞ்சா விற்ற இருவர்

By

Published : Aug 22, 2020, 2:12 PM IST

விழுப்புரம் மாவட்டம் காணை காவல் துறையினர் நேற்று (ஆக. 21) இரவு வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோகைபாடி பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் பெயர் விஜய், அருள்குமார் என்பதும் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த இரண்டு செல்போன், ஐந்து பாக்கெட் கஞ்சாவை பறிமுதல்செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:காரில் கடத்திவரப்பட்ட 4 லிட்டர் கஞ்சா எண்ணெய் பறிமுதல் : இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details