தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல்வரின் நிவாரண நிதிக்கு 500 ரூபாய் வழங்கிய பழங்குடியினர்

விழுப்புரம்: தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இருளர் இன மக்களில் ஒருவர் 500 ரூபாய் அனுப்பியுள்ளார்.

முதல்வரின் நிவாரண நிதிக்கு 500 ரூபாய் வழங்கிய பழங்குடியினர்
முதல்வரின் நிவாரண நிதிக்கு 500 ரூபாய் வழங்கிய பழங்குடியினர்

By

Published : Apr 14, 2020, 1:48 PM IST

திண்டிவனம் அருகேயுள்ள கீழ்பாதி கிராமத்தில் இருக்கும் காட்டுப் பகுதியில் இருளர் இனத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது நான்கு குழந்தைகள், மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அதிகரித்து வரும் கரோனாவின் தாக்கத்தால் நாடு அசாதாரண நிலைக்கு செல்வதை உணர்ந்த ரமேஷ், தம்மால் ஆன உதவியை இந்நாட்டு மக்களுக்கு செய்ய நினைத்துள்ளார்.

இதற்காக பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசகர் ராஜேஷ் என்பவரை அணுகி, கரோனா தடுப்பு பணிக்காக தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 500 ரூபாய் அனுப்பி உதவுமாறு கூறியுள்ளார்.

முதல்வரின் நிவாரண நிதிக்கு 500 ரூபாய் வழங்கிய பழங்குடியினர்

அதன் அடிப்படையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 500 ரூபாயை இணையம் மூலம் ரமேஷ் பெயரில் ராஜேஷ் அனுப்பி வைத்துள்ளார்.

கீழ்பாதி கிராம காட்டு பகுதியில் தத்தளிக்கும் இவர்களுக்கு இதுவரையில் அரசின் ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எவ்வித ஆவணங்களும் வழங்காவிட்டாலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்கள் உதவியதை பலரும் பாராட்டியுள்ளனர் .

இதையும் படிங்க:மது கடத்தலில் ஈடுபட்ட நபர் தப்பி ஓட்டம் - போலீஸ் தேடுதல் வேட்டை

ABOUT THE AUTHOR

...view details