ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்ளின் கோரிக்கைக்கு இணங்க தமிழ்நாடு அரசு பேரறிவாளனுக்கு கடந்த வாரம் 30 நாள்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்துபரோலில் வெளிவந்த பேரறிவாளன், கடந்த சில தினங்களாக ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், இன்று (நவ.7) விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுநீரகக் கோளாறு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்காக தனது தாயார் அற்புதம்மாளுடன் அவர் வந்துள்ளார்.