தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை சாதனா 'மிஸ்' திருநங்கையாக தேர்வு - மிஸ் கூவாகம் அழகிப்போட்டி

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த சாதனா 'மிஸ்' திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார்.

மிஸ் கூவாகம் அழகிப்போட்டி
மிஸ் கூவாகம் அழகிப்போட்டி

By

Published : Apr 18, 2022, 10:10 AM IST

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வந்துள்ளனர்.

நேற்று (ஏப்.17) மாலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, சென்னை திருநங்கை தலைவர்கள் (நாயக்குகள்) அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.

மிஸ் கூவாகம் அழகிப்போட்டி

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டி நடைபெற்றது. பின்னர் மிஸ் கூவாகம் அழகிப்போட்டிக்கான தேர்வு நடந்தது. இதில் சென்னை, சேலம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 50 பேர் 2ஆம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் 2ஆம் சுற்றுக்கான அழகிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 50 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். இந்த சுற்றின் முடிவில் 5 பேர் 3ஆம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் 3 பேருக்கும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், பொது அறிவுத்திறன் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையைச் சேர்ந்த சாதனா மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்த மதுமிதா 2ஆம் இடத்தையும், சென்னையைச் சேர்ந்த எல்சா 3ஆம் இடத்தையும் பிடித்தனர்.

முதலிடம் பிடித்த சாதனாவுக்கு கிரீடம் சூட்டப்பட்டு ரூ.15 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் 2ஆவது இடம் வந்தவருக்கு ரூ.10 ஆயிரமும், 3ஆவது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. அதேபோல் நடனப்போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் மெய் சிலிர்க்க வைத்த நடனம்!

ABOUT THE AUTHOR

...view details