தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு - மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம்: காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.

விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

By

Published : Feb 18, 2021, 2:05 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்ஒலக்கூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் தனக்கு சொந்தமான நிலத்தில் பன்றிகளுக்காக மின்சார வேலி அமைத்திருந்தார். நேற்று (பிப்.17) மாலை அதே கிராமத்தை சேர்ந்த அரங்கநாதன் (45) என்பவர் எதிர்பாராத விதமாக சீனிவாசன் நிலத்தில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட செஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த அரங்கநாதனின் சடலத்தை முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அனுமதியின்றி கரும்பு வயலில் மின்சார வேலி அமைத்த சீனிவாசனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details