தமிழகத்தில் மார்ச் மாதத்தின் துவக்கம் முதலே கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி உள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் விழுப்புரத்தில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலில் இருந்து பாதுகாக்கக் கூடிய பிரத்யேக, இலகுரக தொப்பிகள், கண்களை பாதுகாக்கும் கூலிங் கிளாஸ் மற்றும் கரும்புகை, தூசு ஆகியவற்றில் இருந்து தற்காத்து கொள்ள முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று வழங்கினார்.
கோடை வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களை குளிர்வித்த எஸ்.பி! - sun
விழுப்புரம்: வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கூலிங் கிலாஸ் மற்றும் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
போக்குவரத்து காவலர்
மேலும் அவர்களின் தாகம் தீர்க்கும் வகையில் குளிர்பானங்களையும் அவர் வழங்கினார். இதேபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கும் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.