தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை இரண்டாவது கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்

நாளை இரண்டாவது கட்டமாக உள்ளாட்சித்துறை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடக்கும் 6 ஒன்றியங்களுக்கும் வாக்குப்பெட்டிகளும் வாக்குச்சீட்டுகளும் அனுப்பும் பணி நடைபெறுகிறது.

நாளை இரண்டாவது கட்டமாக உள்ளாட்சி தேர்தல்
நாளை இரண்டாவது கட்டமாக உள்ளாட்சி தேர்தல்

By

Published : Oct 8, 2021, 8:04 PM IST

விழுப்புரம்: நாளை (அக்.09) விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக உள்ளாட்சித்துறைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் நடக்கும் 6 ஒன்றியங்களுக்கும் வாக்குப்பெட்டிகளும் வாக்குச்சீட்டுகளும் அனுப்பும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த ஆறு ஒன்றியங்களின் பட்டியல் பின்வருவன: காணை, கோலியனூர், மயிலம், மேல்மலையனூர், மரக்காணம், வல்லம் ஆகும்.

இதில், 12 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 82 பேர் போட்டியிடுகின்றனர். 135 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 625 பேர் போட்டியிடுகின்றனர்.

316 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு 1,239 பேர் போட்டியிடுகின்றனர். 2,337 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 7,009 பேர் போட்டியிடுகின்றனர்.

மொத்த வாக்குச்சாவடிகள்-1,379; பதற்றமான வாக்குச்சாவடிகள் - 202; மிகவும் பதற்றமானவை - 30;

இத்தேர்தலில் 2 ஏ.டி.எஸ்.பி, 10 டி.எஸ்.பி-க்கள், 12 பறக்கும் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதையும் படிங்க:திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details