நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அதேசமயம், ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, அத்தியாவசிய தேவைகளுக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சுங்கச்சாவடிகள் வழக்கம்போல் இயங்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து இன்றுமுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது.