தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம் தொடக்கம்! - விழுப்புரம் ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம்

விழுப்புரம்: ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களைப் பெறுவதற்கான டோக்கன்கள், விழுப்புரம் நகர ரேஷன் கடைகளில் இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

viluppuram
viluppuram

By

Published : May 29, 2020, 11:42 PM IST

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மே 31ஆம் தேதி வரை நான்காவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசியுடன் பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெயும் சேர்த்து ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

அச்சமயங்களில் ஒரே நாளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக டோக்கன் அடிப்படையில் இந்தப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் ஜூன் மாதத்துக்கான பொருட்களை இலவசமாக ரேஷனில் பெறுவதற்கு மே 29 (இன்று) முதல் 31 வரை டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி விழுப்புரம் நகரப் பகுதிகளில் செயல்படக்கூடிய ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details