73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! - tasmac
விழுப்புரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு லீவு!
”ஆகஸ்டு 15ஆந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் விதிகள்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபானக்கடைகள், ஓட்டல்களை சார்ந்த மதுபானக் கடைகள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.