புதிதாக சீரமைக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திறந்துவைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், "ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள்நிதியமைச்சர் ப. சிதம்பரம் மிகப்பெரிய குற்றவாளி; அவர் ஒன்றும் யோக்கியர் அல்ல. அவர் மீதான குற்றம் நிரூபணமாகியுள்ளது.
'பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்!' - சிதம்பரம் கைது குறித்து சி.வி. சண்முகம் விமர்சனம்
விழுப்புரம்: பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என ப. சிதம்பரம் கைது குறித்து சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
minister
இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். ஏற்கனவே கனிமொழியால் தமிழ்நாட்டின் மானம் கப்பல் ஏறியது; இன்று சிதம்பரத்தால் தமிழ்நாடு தலைகுனிவைச் சந்தித்துள்ளது.
எங்கள் ஆட்சியை குறை கூறியவர்களுக்கு கடவுளாக பார்த்து தண்டனை வழங்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து விழுப்புரம்-திருச்சி, விழுப்புரம்-சேலம் மார்க்கத்தில் இயக்கப்பட உள்ள புதிய பேருந்துகளையும் மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்தடை புகார் பதிவு மையத்தையும் சி.வி. சண்முகம் தொடங்கிவைத்தார்.