விழுப்புரம் மாவட்டத்தில் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முகக்கவசங்கள், நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று வழங்கினார்.
மேலும், கரோனா பாதிப்பினால் ஊரடங்கு அமலில் இருப்பதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.