தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரப்புரையில் மீனவர்களுக்கான புதிய வாக்குறுதிகள் அளித்த முதலமைச்சர்

விழுப்புரம்: வானூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு புதிய வாக்குறுதிகளை வழங்கினார்.

villupuram
விழுப்புரம்

By

Published : Mar 21, 2021, 9:39 AM IST

விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சக்கரபாணிக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மக்களுக்கு பல விதமான வாக்குறுதிகளை முதலமைச்சர் அளித்தார்.

வானூர் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி

அதாவது, மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் காலத்தின்போது ஐந்தாயிரத்திற்கு பதிலாக ஏழாயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம், மீனவர்கள் கடன் உதவி பெறுவதற்கு ஏதுவாக மீனவர்கள் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். மீனவர்கள் விபத்தில் இறந்துவிட்டால் இரண்டு லட்சத்திற்குப் பதிலாக ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குதல் போன்ற புதிய திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், வானூர் தொகுதிகளில் தாங்கள் செய்த சாதனைகளையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார்.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி ஒரு விஷப்பாம்பு! - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details