தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தல்: வேட்பாளர் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு - Vikravandi, Nanguneri By Election

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.

election

By

Published : Oct 3, 2019, 11:55 AM IST

Updated : Oct 3, 2019, 1:06 PM IST

தமிழ்நாட்டில் காலியாக இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றுவந்தது.

இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 28 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவரும் இயக்குநருமான கௌதமன் உள்ளிட்ட 15 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மீதமிருந்த 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும், வேட்பாளர்களுக்கான சின்னமும் ஒதுக்கப்படவுள்ளது.

Last Updated : Oct 3, 2019, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details