கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில், திருப்பதி தேவஸ்தான குழு உறுப்பினர்களுக்கு சிறப்பான வரவேற்பினை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையைச் சேர்ந்தவருமான குமரகுரு வழங்கினார்.
அதனையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வந்த குழுவினர் தமிழ்நாட்டில் திருப்பதி கோயிலைக் கட்டுவதற்காக திருச்சி ரோட்டில் உள்ள நிலங்களைப் பார்வையிட்டனர்.