தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’வெற்றிபெற்றதும் திண்டிவனம் பேருந்து நிலையம் அமைக்க முயற்சி எடுப்பேன்’ - திமுக வேட்பாளர் - election campaign

விழுப்புரம்: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் சீத்தாபதி சொக்கலிங்கம் மரக்காணம் ஒன்றியத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம் பரப்புரை
திமுக வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம் பரப்புரை

By

Published : Apr 1, 2021, 9:28 AM IST

திமுக சார்பில் போட்டியிடும் சீத்தாபதி சொக்கலிங்கம் திண்டிவனம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தென்களவாய், வைரம்பேட்டை, கீழ் எடையாளம், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்பாளருக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளரிடம் கீழ் எடையாளம் பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

அதற்கு வேட்பாளர் சீதாபதி சொக்கலிங்கம், வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக திண்டிவனம் பேருந்து நிலையம் அமைத்திட முயற்சி எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.

கடந்த ஆட்சியில் பலமுறை திண்டிவனம் பேருந்து நிலையம் குறித்து கோரிக்கை வைத்தும் ஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க:சிவகங்கையில் கனிமொழி தீவிர பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details