விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்தத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திவருகின்றன.
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக துண்டறிக்கை: மூவர் கைது - campaign
விழுப்புரம்: ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்பு குறித்து துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
arrest
இந்நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டம் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்த திலீபன், தொல்காப்பியன், மதுரை வீரன் ஆகிய மூன்று பேர் நேற்று விழுப்புரம் பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.
இது குறித்து, தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல் துறையினர், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த பிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர்.