தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரக்காணத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது! - Villupuram Marakanam

விழுப்புரம்: மரக்காணம், கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற மூன்று பேரை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

arrest
arrest

By

Published : Dec 17, 2020, 8:58 AM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், அதனைச் சுற்றியுள்ள வாட்டாரக் கிராமங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மரக்காணத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையில் மரக்காணம், கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த முருகன் (50), கணேசன் (42), சுப்பிரமணியன் (49) ஆகிய மூன்று பேரை நேற்று (டிச.16) காவல் துறையினர் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், லாட்டரி சீட்டு கணக்கிடும் புத்தகம், 3 செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். அதன்பின் மூன்று பேர் மீதும் மரக்காணம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்யப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை இறந்ததால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details