விழுப்புரம் மாவட்டம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள பெருமாள்சாமி வீதியில் வசித்து வருபவர் கு.ஜோதிகுமாா் (52). பொறியாளரான இவரின் தொலைபேசிக்கு ஜனவரி 15 ஆம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிா்முனையில் பேசிய நபா், தான் தனியாா் நிறுவனம் மூலம் தங்களை தொடர்பு கொண்டதாகவும், நீங்கள் ரூ. 1,750 ரூபாயை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால், ஒரே நாளில் ரூ.3 ஆயிரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதனை நம்பிய ஜோதிகுமாா் அவா் கொடுத்த எண்ணுக்கு ரூ.15 ஆயிரம் இணையவழியில் செலுத்தியுள்ளாா். அதன் பின்னர் பின்னா் லாபத் தொகையுடன் சேர்த்து பின்னா் ரூ .17,600 கிடைத்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து மேலும் அந்த நபரின் தூண்டுதலின் பேரில், அவர் கொடுத்த எண்ணுக்கு முறையே 2.23 லட்சம் ரூபாய் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரம் ரூபாயையும் ஜனவரி 19 ஆம் தேதிக்குள், 3 நாட்களில் அனுப்பி வைத்துள்ளாா்.