விழுப்புரம்:கண்டமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்து, ஆ.ராசா எம்பியின் புகைப்படத்திற்கு கரும்புள்ளி குத்தி அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
அண்ணா சிலை அவமதிப்பு வழக்கு - பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது - சசிகலா
விழுப்புரம் மாவட்டம் அண்ணா சிலை அவமதிப்பு வழக்கில் பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த ஆகாஷ், அப்பு , வீரமணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்து முண்ணனியை சேர்ந்த யுவராஜ் , கணேஷ், கபில் ஆகிய மேலும் 3 பேர் தேடப்பட்டுவருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அண்ணா சிலை அவமதிப்பு...கண்டமங்கலத்தில் போலீஸ் குவிப்பு