தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 19, 2020, 6:02 PM IST

ETV Bharat / state

விழுப்புரத்துக்கு ஆயிரம் ரேபிட் கிட் - கரோனாவைக் கண்டறிவது ஈஸி...

விழுப்புரம்: கரோனா வைரஸ் தொற்றை விரைவில் கண்டறியும் ஆயிரம் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் விழுப்புரம் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக வந்துள்ளது.

villupuram hospital
villupuram hospital

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விழுப்புரத்தில் இதுவரை 26 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆயிரத்து 798 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மூன்று நிற மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், விழுப்புரம் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இந்நிலையில், தமிழ்நாடு அரசிடம் உள்ள 24 ஆயிரம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளில் (rapid testing kit) , ஆயிரம் கருவிகள் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவிகள் இன்று முதல் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் கரோனா தொற்றை 30 நிமிடங்களில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

இதையும் பார்க்க: கரோனா விழிப்புணர்வை ஐநா மூலம் ஏற்படுத்தும் கேப்டன் கோ - ரிட்

ABOUT THE AUTHOR

...view details