விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூரில் தமிழ்த்துறவி கவிஞர்களால் எழுதப்பட்ட தேவாரம் 7ஆம் நூற்றாண்டின் தமிழ் சைவ நியதிப் படைப்பில் முதன்மையான தெய்வம் 'அருட்கொண்டநாதர்' என போற்றப்படும் இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் காலை 10 மணியளவில் பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது.
திராவிட கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோயிலின் தற்போதைய அமைப்பு 10ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயில் சோழ அரசி செம்பியன் மகாதேவியின் அருளாட்சியைப் பெற்றாக தேவராத்தில் பாடப்பெற்றுள்ளது.
மேலும் இக்கோயிலில் தான் 63 நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரருக்கு சிவபெருமான் இங்கு தான் காட்சி அளித்ததாகவும், இங்கு தான் சுந்தரர் சிவபெருமானை ’பித்தா பிறைசூடி’ என பாடிய ஸ்தலம் எனவும் கூறப்படுகிறது.சிவன் கிருபாபுரீஸ்வரர் என்றும், அவரது மனைவி பார்வதி மங்களாம்பிகை என்றும் போற்றப்படுகிறார்.
கோயிலைச் சுற்றி ஒரு கருங்கல் சுவர் அதன் அனைத்து சந்நிதிகளையும் சூழ்ந்துள்ளது. கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம், நுழைவுவாயில் கோபுரம் உள்ளது.
இதையும் படிங்க:பாலதண்டாயுதபாணி கோயிலில் நடந்த சுயம்வரா பார்வதி யாகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு