விழுப்புரத்தில் பழங்குடியின இருளர் மனித உரிமை மாநாட்டில் விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பங்கேற்றார். அவருடன் துரை ரவிக்குமார் எம்.பி, சிவகாமி, ஏ.வி.சரவணன், பேராசிரியர் கல்யாணி, பி.வி ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய திருமாவளவன், “நாட்டில் பழங்குடியின இருளர்கள் தாழ்த்தப்பட்டோருக்கு, எதிராக சட்டங்கள் இருந்தும் அவற்றினை சாதியவாதிகள், மதவாதிகள், முழுமையாக நிறைவேற்ற விடுவதில்லை. இது சனாதானத்தின் சதி. தற்பொழுது விழுப்புரத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது மனித உரிமைகள் மாநாடு அல்ல. இது ஒரு மோடி எதிர்ப்பு மாநாடு.
‘பார்ப்பனர்களின் இரவு நேர காவலன் மோடி, பகல் நேரக் காவலன் அமித் ஷா” - திருமாவளவன் - விழுப்புரத்தில் பேசிய திருமா
பார்ப்பனர்களின் இரவு நேர காவலராக மோடியும், பகல் நேரக் காவலராக அமித் ஷாவும் சிறப்பாக பணியாற்றி வருவதாக விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
![‘பார்ப்பனர்களின் இரவு நேர காவலன் மோடி, பகல் நேரக் காவலன் அமித் ஷா” - திருமாவளவன் Etv Bharat திருமாவளவன் பேச்சு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16527496-thumbnail-3x2-sa.jpg)
Etv Bharat திருமாவளவன் பேச்சு
திருமாவளவன் பேச்சு
பார்ப்பனர்களின் வேலைக்காரன் மோடி, பார்ப்பனர்களின் இரவு நேர காவலராக மோடியும், பகல் நேர காவலராக அமித்ஷாவும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்கின்றனர். இதற்காக மோடி வகிக்கின்ற பதவியின் பெயர் பிரதமர்” என்றார்.
இதையும் படிங்க:அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த திமுகவினர்..