விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூரிலிருந்து நாயனூர் செல்லும் சாலையில், தனியார் பள்ளி வாகனம் 22 குழந்தைகளுடன சென்றுகொண்டிருந்தது. அப்போது, திருக்கோவிலூரிலிருந்து செஞ்சி நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளிப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
பள்ளிப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 10 பேர் காயம் - thirukovilur school bus collpase with private bus
விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே பள்ளிப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
accident
இந்த விபத்தில் தனியார் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர், பயணிகள், பள்ளிக் குழந்தைகள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அரகண்டநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்த பெண் உள்பட 6 பேர் கைது