கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வேலாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல வேலையை முடித்து விட்டு, திருக்கோவிலூர் புறவழிச் சாலை வழியாக வீட்டிற்குத் தமது இருசக்கர வாகனத்தில் மணி சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு லாரி ஒன்று, முன்னே சென்ற மணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலை தடுமாறிய மணி லாரியின் சக்கரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.