விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கடலூர் மாவட்டம் எனதிரிமங்களம் இடையே ரூ. 25 கோடியே 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை இரண்டு நாட்களுக்கு முன்னதாக சேதம் அடைந்தது. அணைக்கட்டின் தடுப்புச்சுவர் முழுவதுமாக பாதிப்படைந்து தண்ணீர் வெளியேறி வீணாக கடலில் கலந்தது. தரமற்ற நிலையில், அணைக்கட்டு கட்டப்பட்டிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அங்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டது.
தென்பெண்ணையற்று தடுப்பணை சேதம்: 4 பேர் பணி இடைநீக்கம்!
விழுப்புரம்: தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைப்பு தொடர்பாக 4 பேர் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
dam
அதனடிப்படையில், தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி உள்ளிட்ட 4 பேரினை பணியிடை நீக்கம் செய்ய பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுப்பணித்துறை உடனடியாக தரமான தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.