தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் அரசு முனைப்பு காட்ட வேண்டும்’ - விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் கோரிக்கை - நெல் கொள்முதல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்றும் குறைவான நெல் கொள்முதலால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளதாகவும் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 12, 2022, 5:54 PM IST

விழுப்புரம்:தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாநிலக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

22 விழுக்காடு ஈரப்பதம் கொண்ட நெல்லை, தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம், “அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மலை போல் நெல் குவிந்துள்ளது. நெல்லை கொள்முதல் செய்வதில் மிகப் பெரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம்

குறிப்பாக 17 விழுக்காடு ஈரப்பதம் கொண்ட நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் ஏராளமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததில் நெல் முளைக்கும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிப்பு:தமிழ்நாட்டில் உள்ள டாடா நிறுவனத்துக்கு வடமாநிலத்தில் இருந்து பணியாளர்கள் - வேல்முருகன் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details