விழுப்புரம்: தமிழகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று விழுப்புரம் புதுவை சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார். அப்போது, "அன்புக்கு நான் அடிமை. இங்கே கொத்தடிமைகள் அதிகமாக இருக்கிறார்கள். கந்துவட்டிக் கொடுமை இங்கே தலை விரித்தாடுகிறது.
'கொள்ளையர்களை வெளியேற்றும் இயக்கம் தொடங்கிவிட்டது'- கமல்ஹாசன் - makkal needhi maiam
வெள்ளையனே வெளியேறு இயக்கம்போல் கொள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிவிட்டது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்காரர்களை விட கொள்ளைக்காரர்கள் அதிகமாகிவிட்டார்கள். வெள்ளையேன வெளியேறு இயக்கம் போல் தற்போது கொள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிவிட்டது. பெட்ரோல் விலை என்னவாக இருந்தாலும் நம் நாட்டில் 84 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே பெட்ரோலை வெளிநாட்டில் 34 ரூபாய்க்கு விற்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்தபோது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை என்னவாக இருந்தது. இப்போது, என்னவாக இருக்கிறது? எழுச்சி புரட்சி எல்லாம் தொடங்கிவிட்டது. நாங்கள் ஆட்சியமைத்தால் இதையெல்லாம் சரி செய்வோம். ஊர்கூடி தேர் இழுத்தால் நாளை நமதே" என்றார்.
இதையும் படிங்க:’கமல், ரஜினிக்காக வாக்கை வீணாக்க மக்கள் தயாரில்லை’