தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது - கைது

விழுப்புரம்: சின்னசேலம் அருகே பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த நபரை காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

File pic

By

Published : May 30, 2019, 1:06 PM IST

Updated : Jun 2, 2019, 10:38 AM IST

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வட்டம் வடக்கு காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஊமையன் என்கிற துரைசாமி. இவர் மீது எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் கள்ளத்துப்பாக்கி தயாரித்தல், மான் வேட்டை ஆடுதல், அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைதான துரைசாமி

எனவே, இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, துரைசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதன்பேரில் துரைசாமி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Last Updated : Jun 2, 2019, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details