விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அதிமுக கழக மகளிர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(டிசம்பர் 13) விழுப்புரம் விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தலைமையேற்று ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அவர், கூட்டத்திற்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தினாலே அதிமுகவை 100 ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாது.
'பெண்கள் ஆதரிக்கும் கட்சியே சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும்' -அமைச்சர் சி.வி. சண்முகம் அதிமுகவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. அந்த தவறை ஒத்துக்கொள்கிறோம். இனிவரும் காலங்களில் பெண்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படும். தாய்மார்கள் மனது வைத்தார் அதிமுகவின் வெற்றி நிச்சயம்.
பெண்கள், இளைஞர்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்கள்தான் வருகிற தேர்தலில் வெற்றிபெற முடியும். அதிமுகவில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்தார். பெண்கள்தான் அதிமுகவின் தூண், சமுதாய அக்கறை உள்ள பெண்களை கட்சியில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:நிவர் புயல் பாதிப்பை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும் - ரவிக்குமார் எம்.பி