தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா சிலை அவமதிப்பு...கண்டமங்கலத்தில் போலீஸ் குவிப்பு

விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவமரியாதை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏராளமான திமுகவினர் திரண்டனர். இதனையடுத்து அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 26, 2022, 1:14 PM IST

விழுப்புரம்:கண்டமங்கலம் அருகே விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, பேரறிஞர் அண்ணா முழு உருவச் சிலைக்கு, இன்று(செப்.26) அதிகாலை மர்ம நபர்கள் சிலர் காலணியை மாலையாக அணிவித்து அவமரியாதை செய்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேரறிஞர் அண்ணா சிலையில், அவரின் முகத்தை சிகப்பு துணியால் மூடிவிட்டு, அவரின் கழுத்தில் திமுக எம்.பி ராஜாவின் புகைப்படத்துடன் கூடிய செருப்பு மாலையை மர்ம நபர்கள் அணிவித்துள்ளனர்.

கண்டமங்கலம் போலீசார் விரைந்து சென்று அண்ணா சிலைக்கு அணிவிக்கப்பட்ட செருப்பு மாலையை உடனடியாக அகற்றினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் அண்ணா சிலை முன்பு திமுகவினர் கூடி செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, கண்டமங்கலத்திலும், அண்ணா சிலை முன்ம் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details