தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 25, 2020, 4:36 PM IST

ETV Bharat / state

படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை - மீனவர்கள் ஆதங்கம்

படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

pillaichavady fishers boats safely
படகுகளை பாதுகாப்பாக நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை மீனவர்கள் ஆதங்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பிள்ளைச்சாவடி மீனவ கிராம பகுதியில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையிலான அலுவலர்கள் இன்று ஆய்வுமேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்குப் பின்னர் அக்கிராமத்தைச் சேர்ந்த மீனவர் கூறும்போது, "எங்கள் கிராமத்தில் கடல் அரிப்பைத் தடுக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை - மீனவர்கள் ஆதங்கம்

மேலும், புயல் காலங்களில் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தவும், மீன் வலைகளைப் பாதுகாப்பாக வைக்கவும் எந்த வசதியும் இல்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தற்போது தெரிவித்தோம். அதற்கு அவர் இப்பொழுது இதைப்பற்றி பேச என்ன இருக்கிறது என்று கேட்கிறார். எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்" என்றார். இதற்கிடையில் இந்தப் பகுதியில் 12 பேர் அடங்கிய மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:நிவர் புயல் எதிரொலி: இடிந்து விழுந்த 650 ஆண்டுகள் பழமையான தர்கா!

ABOUT THE AUTHOR

...view details