விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள்அமைச்சர் க. பொன்முடி கூறுகையில், “விழுப்புரம் மத்திய மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் வருகிற ஜனவரி 30ஆம் தேதி மாலை 3 மணியளவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்திலுள்ள தளபதி அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அறிவித்துள்ளார்.