தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளியை மலம் சாப்பிட வைத்த ஓணருக்கு ஓராண்டு சிறை! - கூலித் தொழிலாளி

திருடியதாக பொய் புகார் கூறி கூலித் தொழிலாளியை வலுக்கட்டாயமாக மலம் சாப்பிட வைத்த கல்குவாரி ஓணருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருடியதாக பொய் புகார் கூறி கூலித் தொழிலாளியை மலம் சாப்பிட வைத்த கொடுமை
திருடியதாக பொய் புகார் கூறி கூலித் தொழிலாளியை மலம் சாப்பிட வைத்த கொடுமை

By

Published : Feb 4, 2023, 3:57 PM IST

விழுப்புரம்: தமிழ்நாட்டை உலுக்கிய புதுக்கோட்டை மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் போல மலத்தை வலுக்கட்டாயமாகச் சாப்பிட வைத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு அரங்கேறியுள்ளது. வானூர் அடுத்த திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி இவர் தனக்குச் சொந்தமான கல்குவாரியில் கிரஷ்ஷர் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு இவர் வீட்டில் வைத்திருந்த கல் உடைக்கும் இயந்திரங்கள் மற்றும் மண்வெட்டி போன்றவை திருடு போனதாகவும், அதே கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வெள்ளையன் என்பவர் தான் திருடினார் என்று கூறிய பழனியாண்டி சில நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளையன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டிற்குச் சென்று டிவி, சம்மட்டி போன்ற பொருட்களை எடுத்து வந்துள்ளார்.

மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெள்ளையனைத் தாக்கி மனித மலத்தை வலுக்கட்டாயமாகச் சாப்பிட வைத்துள்ளார். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த வெள்ளையனின் மனைவி பூபதி வானூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறை அதிகாரிகள் எடுக்காததால் அடுத்த கட்ட முயற்சியாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவியுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க வானூர் போலீசார் பழனியாண்டி, சுரேஷ் பிரவீன் ஆகிய மூவரைக் கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கின் மீதான விசாரணை வானூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் பிரவீன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். பழனியாண்டியின் மீது மூன்று பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து வானூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உடனடியாக பழனியாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: பெண் எஸ்பி பாலியல் தொல்லை வழக்கு.. உதவி விசாரணை அதிகாரி சாட்சியம்!

ABOUT THE AUTHOR

...view details