விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (30). அரசு ஊழியரான இவர், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில தினங்களாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி காலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் சாந்தகுமார் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை குத்தாம்பூண்டி சாலையில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.