தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைது செய்த பின்பும் கும்மியடித்து பாட்டு பாடிய திமுகவினர்! - திமுகவினர் கைது

விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த திமுகவினர் கிராமிய பாடல்களை பாடி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வருகிறது.

கும்மியடித்து பாட்டு பாடிய திமுகவினர்
கும்மியடித்து பாட்டு பாடிய திமுகவினர்

By

Published : Nov 22, 2020, 2:09 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் பகுதியில் நேற்று(நவ.22) தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை காவல் துறையினர் இரண்டாவது நாளாக கைது செய்தனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளர் க.பொன்முடி தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் காந்திசிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மியடித்து பாட்டு பாடிய திமுகவினர்

இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொன்முடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை காவல் துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.அப்போது கைது செய்யப்பட்டு மண்டபத்தில் இருந்த தொண்டர்கள் கும்மியடித்து கிராமிய பாடல்களை பாடினர். இதனை அங்கிருந்த திமுக துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி ஆகியோர் வெகுவாக ரசித்தனர்.

இதையும் படிங்க: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பண பட்டுவாடா?

ABOUT THE AUTHOR

...view details