தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதி தேர்வில் 'கெடுபிடி' பரிசோதனை! - ஆசிரியர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வை 11 ஆயிரத்து 63 பேர் எழுதினர்.

File pic

By

Published : Jun 8, 2019, 4:07 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தேர்வுகள் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 28 தேர்வு மையங்களில் 11 ஆயிரத்து 063 நபர்கள் எழுதினர்.

இதில் 758 மாற்றுத்திறனாளிகளும், 10 பார்வையற்றவர்களும் எழுதுகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு அறைக்குள் அனுமதி கடிதம் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதித்தனர். அனுமதிக் கடிதத்தில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டு இருந்தால் அவர்களின் அடையாள அட்டைகள் டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி உள்ளிட்ட அவர்களின் அடையாள அட்டையை காண்பித்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details