விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்கிரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அருகிலுள்ள விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயில், மயிலம் முருகன் கோயில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார்.
திருவக்கரை கோயிலுக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.