காவலர் உடல் தகுதி திறன் தேர்வுகள் மீண்டும் நவம்பர் 18ஆம் தேதி முதல் நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 6ஆம் தேதி முதற்கட்ட காவலர் உடல்தகுதி தேர்வு காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றுவந்தது.
அயோத்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நவம்பர் 9 முதல் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட உடல் தகுதி தேர்வுகள் முறையே நவம்பர் 18 முதல் 21 வரை நடைபெறும்.
முதற்கட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 14, 15ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் முறையை நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிகளில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலுக்கு 04146 - 220161 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சரக்கு கப்பலில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!