வடக்கு மண்டலம்:
வடக்கு மண்டலம் திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படுது உண்டு. அதை நிரூபிக்கும் வண்ணமே உள்ளது முந்தைய தேர்தல் வெற்றிகள். சென்னை மாவட்டத்தின் தொகுதிகள், சென்னையின் பகுதிகளாக அறியப்படும் அண்டைமாவட்ட தொகுதிகளான 10 தொகுதிகள் நீங்கலாக, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களின் 52 தொகுதிகளை உள்ளடக்கியது இந்த மண்டலம்.
டெல்டா மாவட்டங்களுக்கு வடக்கே, கிழக்கு கடற்ககையோர மாவட்டங்கள், ஆந்திர எல்லையோர மாவட்டங்களை உள்ளடக்கியது வடக்கு மண்டலம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்கள் விவசாயத்தை பிரதானமாக கொண்டவை.
வடக்கு மாவட்டங்களில் வன்னியர்கள், தலித்களின் வாக்கு வங்கிகள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வடக்கு மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாமகவின் வாக்கு வங்கி கணிசமான அளவில் இருக்கிறது.
பறவைக் கோணம்:
வடக்கு மண்டலத்தில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 1967ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுவரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக ஏறு முறையும், திமுக நான்கு முறையும் வென்றிருக்கின்றன. 2011ஆம் ஆண்டு தேர்தலில் மட்டும் தொகுதியை தேமுதிக கைப்பற்றியிருக்கிறது.
அதேபோல், பொன்னேரி (தனி) தொகுதியை அதிமுக ஏழு முறையும், திமுக நான்கு முறையும், சிபிஐ ஒரு முறையும் கைப்பற்றியிருக்கின்றன.
திருத்தணியைப்ப் பொறுத்தவரை அதிமுக ஆறு முறை, திமுக மூன்று முறை, காங்கிரஸ், பாமக, தேமுதிக தலா ஒரு முறை வென்றிருக்கின்றன. இதில் காங்கிரஸ் கட்சி கடைசியாக 1967ஆம் ஆண்டு திருத்தணியில் வென்றிருக்கிறது. மேலும் திருவள்ளூரில் அதிமுக ஐந்து முறை, திமுக ஆறு முறை, தமாகா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் திமுக கடந்த தேர்தல்களில் அதிக முறை வென்றிருக்கின்றன. செங்லப்பட்டை திமுக ஐந்து முறை, அதிமுக நான்கு முறையும், திருப்போரூரை திமுக ஆறு முறை, அதிமுக ஐந்து முறையும் கைப்பற்றியிருக்கின்றன. செய்யூரைப் (தனி) பொறுத்தவரை 2011ல் அதிமுகவும், 2016ல் திமுகவும் வென்றிருக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் மதுராந்தகம் (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி) ஆகிய தொகுதிகளில் திமுகவின் கொடியே அதிக முறை பறந்துள்ளது. அதேசமயம், உத்திரமேரூர் தொகுதியை அதிமுகவும், திமுகவும் தலா ஆறு முறை கைப்பற்றியிருக்கின்றன. அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் மட்டும் அதிமுக தனது தடத்தை ஆறு முறை இதுவரை பதித்துள்ளது. திமுக ஐந்து முறை வென்றிருக்கிறது.
வேலூர் மாவட்டத்திலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் 2019ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை அரக்கோணம் மற்றும் சோளிங்கரில் அதிமுக தலா ஐந்து முறை வென்றிருக்கிறது. திமுக அரக்கோணத்தை ஆறு முறையும், சோளிங்கரை ஒரு முறையும் கைப்பற்றியிருக்கிறது.
அதேசமயம் ராணிப்பேட்டை, ஆற்காட்டை திமுக தலா ஐந்து முறை கைப்பற்றியுள்ளது.
வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை காட்பாடி மற்றும் வேலூர் தனது கோட்டை என்பதை திமுக அதிக முறை நிரூபித்துள்ளது. (காட்பாடியில் 8 முறை, வேலூரில் 6 முறை வெற்றி)
வடக்கு மண்டலத்தில் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செய்யூர்(தனி), கேவிகுப்பம்(தனி), ஆம்பூர், ஜோலார்பேட்டை, கீழ்பெண்ணாத்தூர், மயிலம், விக்கிரவாண்டி, திட்டக்குடி(தனி), நெய்வேலி ஆகிய தொகுதிகள் 2011ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டவை.