திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் அரசூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு 2,320 பயனாளிகளுக்கு 14 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், நிதி உதவிகளை வழங்கினார்.
’5 முறை ஆண்டவர்களுக்கு நிதி நிலைமை கூட தெரியவில்லை’ - சி.வி. சண்முகம் சாடல் - thalikku thangam scheme
விழுப்புரம்: தமிழ்நாட்டில் ஐந்து முறை ஆட்சி செய்தவர்களுக்கு மாநிலத்தின் நிதி நிலைமை பற்றிய விவரம் கூட தெரியவில்லை என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சாடியுள்ளார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர எண்ணற்ற திட்டங்களைத் தீட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. நகரத்தில் உள்ளதுபோல், கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கும் வசதி வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கினார். உயர் கல்வியில் தமிழ்நாடு இன்று சிறந்து விளங்க காரணமாய் இருந்தவர் ஜெயலலிதா. இதேபோல் திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவியும் வழங்கிய ஒரே அரசு ஜெயலலிதாவின் அரசுதான்.
ஆனால் தமிழ்நாட்டில் ஐந்து முறை ஆட்சி செய்தவர்கள், மாநிலத்தின் நிதி நிலைமை பற்றி கொஞ்சம் கூட அறியாமல் பொய் வாக்குறுதிகளைக் கூறி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக அரசின் இலவச திட்டங்களை பயன்படுத்தி மக்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும்” என்றார்.