விழுப்புரத்தில் ரூ.23.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் நீதிமன்ற கட்டங்களை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். ரமேஷ், ஆர்.சுப்பையா ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் நீதிமன்றம் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது. நீதித்துறையின் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு முதல் தற்போது நீதித்துறையின் வளர்ச்சிக்காக . 1,800 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் புதிய நீதிமன்ற கட்டடம் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டடம் கட்டி தரப்பட்டுள்ளது. சொந்த கட்டங்களில் நீதிமன்றங்கள் இயங்கும் ஒரே மாவட்டம் விழுப்புரம் மட்டுமே.
சிறிய வழக்குகளை விசாரிக்க தமிழ்நாட்டில் 59 தாலுகாக்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 900 நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் 2019 வரை 440 புதிய நீதிமன்றங்கள் கட்டி திறக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.