தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி சொன்ன ஏமாற்றம் இதுதான்: அடித்து சொல்லும் தமிழருவி மணியன்

விழுப்புரம்: தனது ரசிகர்கள் இதுவரையில் முழுவீச்சில் யுகபுரட்சியை தொடங்காததுதான் ரஜினிக்கு ஏமாற்றம் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

தமிழருவி
மணியன்

By

Published : Mar 9, 2020, 3:17 PM IST

ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன? ஏமாற்றம் என்ன? என்ற தலைப்பில் விழுப்புரத்தில் நேற்று அரசியல் ஆய்வுரை கூட்டம் நடைபெற்றது. இதில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இன்றைய சூழலில் தமிழக அரசியல் அரங்கம் முழுவதும் அழுக்கேறி கிடக்கிறது. கோடிகளைப் புறந்தள்ளிவிட்டு மக்களின் நலனுக்காக அரசியலில் அடியெடுத்து வைக்கிறார் ரஜினி. இதுபோன்ற ஒருவரை திமுக, அதிமுகவில் காணமுடியாது.

என்பிஆர், என்சிஆர் போன்ற சட்டங்கள் மூலம் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் நிரூபிக்க முடியுமா? 2010இல் காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது என்பிஆர் குறித்து கவலைப்படாதது ஏன்?

தமிழருவி மணியன் பேச்சு

என்பிஆர், என்சிஆர் போன்ற சட்டங்களால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் பொங்கி எழக்கூடிய முதல் ஆளாக ரஜினி இருப்பார். அவருடன் நானும் துணை நிற்பேன்.

தனது ரசிகர்கள் இதுவரையில் முழுவீச்சில் யுகபுரட்சியை தொடங்காததுதான் ரஜினிக்கு ஏமாற்றம். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தமிழ்நாடு முதலமைச்சராக வரவேண்டும் என்று நான் கூறியுள்ளேன். கலைஞர் கருணாநிதியின் அருகில் அமர்ந்திருந்ததை விட துரைமுருகனுக்கு வேறு எந்த தகுதியும் இல்லை. திமுக, அதிமுகவுடன் இணைந்து தேர்தல் களத்தில் நிற்க மாட்டேன் என ரஜினி தெரிவித்துவிட்டார்.

தமிழருவி மணியன் பேச்சு

50 ஆண்டுகாலம் தமிழகத்தை பிடித்திருந்த ஊழல் பேர்வழிகள் அனைவரையும் புறந்தள்ளிவிட்டு, ஒற்றை மனிதராக தவமிருக்கும் ரஜினியை கோட்டையில் கொண்டு வந்து நிறுத்துவதுதான் எங்களது நோக்கம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் படிந்து கிடக்கக் கூடிய இழிந்த அரசியல் கலாசாரத்தையே மாற்றிப் போடுவதுதான் ரஜினியின் மாற்று அரசியல்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details