தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மா மினி கிளினிக்குகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கிராமத்திலேயே மருத்துவ சேவை - சி.வி.சண்முகம்

அம்மா மினி கிளினிக்குகள் மூலம் ஏழை எளிய மக்கள் அவர்களது கிராமத்திலேயே மருத்துவ சேவை பெற முடியும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சி.வி.சண்முகம்
அமைச்சர் சி.வி.சண்முகம்

By

Published : Dec 17, 2020, 2:57 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட வடவாம்பலம், வி.அகரம், பாணம்பட்டு, காவனிபக்கம் உள்ளிட்ட ஏழு கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அம்மா கிளினிக்குகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று (டிச.17) திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் நடைபெறுகிற ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறப்பான மாநிலமாக செயல்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நகரம் முதல் கிராமம்வரை சிறப்பான சுகாதார அமைப்பு இருந்ததால்தான் நம்மால் சிறப்பான முறையில் கரோனாவை கையாள முடிந்தது.

சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு:

சுகாதார கட்டமைப்பை இன்னும் சிறப்பாக நடைமுறைப்படுத்த ஏழை எளிய மக்களுக்கு முழுமையான மருத்துவ சேவை சென்றடைய அரிய வாய்ப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா கிளினிக் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் இந்த திட்டத்தின் கீழ் இருப்பதால் கிராமத்திலிருந்து மக்கள் நகரத்திற்கு செல்லும் சிரமங்கள் தவிர்க்கப்படுகின்றன. அதேபோல் இந்த திட்டம் மூலம் ஏழை எளிய மக்கள் கிராமத்திலேயே மருத்துவ சேவை பெறலாம். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 21 அம்மா கிளினிக்குகள் இன்று திறக்கப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க:தேனியில் அம்மா மினி கிளினிக்குகள்: துணை முதலமைச்சர் திறந்துவைப்பு

ABOUT THE AUTHOR

...view details